இந்தியா

மத்திய காஸாவில் 30 ஹமாஸ் பயங்கரவாதிகள் கொலை

மத்திய காஸாவில் முப்பது ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டனர்

கிழக்கு நியூஸ்

மேற்கு கான் யூனிஸில் உள்ள ஹமாஸ் இலக்குகள் மீது இஸ்ரேலியத் தரைப்படைகள் இரவோடு இரவாக விரிவான தொடர் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

இந்தத் தாக்குதல்களின் போது, நகர்ப்புறங்களில் உள்ள பொதுமக்கள் முகாம்களிலிருந்து செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாதிகளை இஸ்ரேலிய படையினர் கொன்றனர்.

ஆறு நிமிடங்களில் சுமார் 50 இலக்குகள் மீது தொடர்ச்சியான விமான மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. இதில் இஸ்ரேலியப் படைகளுக்கு அச்சுறுத்துலாக இருந்து வந்த ராணுவக் கட்டமைப்புகள், டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளின் ஏவுதளங்கள், பாதாளத்தில் இயங்கி வந்த பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளின் சந்திப்பு மையங்கள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டன.

மேலும், மத்திய காஸாவில் 30 பயங்கரவாதிகளை அழித்ததுடன், ஆயுதங்களையும் இவர்கள் கைப்பற்றியுள்ளார்கள்.