இந்தியா

இந்திய ரயில்வே: செக்‌ஷன் கன்ட்ரோலர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு | Indian Railway |

விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 14 என அறிவிப்பு...

கிழக்கு நியூஸ்

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 368 செக்‌ஷன் கன்ட்ரோலர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசு இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக 368 செக்‌ஷன் கன்ட்ரோலர் பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பை வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“செக்‌ஷன் கன்ட்ரோலர் பணிக்கு நாடு முழுவதிலும் உள்ள தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்படுகின்றன. இப்பணிக்காக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 35,400 சம்பளம் வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, SC/ ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள், PwBD (பொது/ EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகள், PwBD (SC/ ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகள் மற்றும் PwBD (OBC) பிரிவினருக்கு 13 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு.

விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பதாரர்களின் பிரிவுக்கு ஏற்ப மாறுபடும். SC, ST, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், திருநங்கைகள், சிறுபான்மையினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBC) உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 250 ஆகும். இவர்கள் கணினி அடிப்படையிலான தேர்வில் கலந்துகொண்ட பிறகு, முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும். மற்ற பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 ஆகும். விண்ணப்பதாரர்கள் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.rrbapply.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் உங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 14.10.2025 ஆகும்.”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.