சிவசேனா கட்சியில் இணைந்த நடிகர் கோவிந்தா ANI
இந்தியா

சிவசேனா கட்சியில் இணைந்த நடிகர் கோவிந்தா

கடந்த 2004-ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர், வடக்கு மும்பையில் போட்டியிட்டு 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

யோகேஷ் குமார்

பிரபல ஹிந்தி நடிகர் கோவிந்தா சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார்.

கடந்த 2004-ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் கோவிந்தா. வடக்கு மும்பையில் போட்டியிட்ட இவர், அங்கு 5 முறை பாஜக எம்.பி.யாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம் நாயக்கை சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

நாடாளுமன்ற கூட்டங்களுக்கு வராமல் இருந்ததால் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், 2009-ல் அவர் அரசியலில் இருந்து விலகி நடிப்பைத் தொடர்ந்தார்.

இந்நிலையில் பாஜக ஆதரவில் ஆட்சி செய்யும் மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை நேற்று முன்தினம் நடிகர் கோவிந்தா சந்தித்தார்.

இதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியில் கோவிந்தா இணைந்துள்ளார். இந்தத் தேர்தல் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.