பி.எஸ். எடியூரப்பா ANI
இந்தியா

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு சதாசிவநகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

யோகேஷ் குமார்

17 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு சதாசிவநகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த பிப். 2 அன்று தாய், மகள் ஆகிய இருவரும் ஒரு மோசடி வழக்குத் தொடர்பாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்தபோது, சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாகத் கூறப்படுகிறது.

இது தொடர்பாக எடியூரப்பா கூறியதாவது:

“ஒரு பெண் என் மீது புகார் அளித்ததாக எனக்கு தெரியவந்தது. ஒரு மாதத்திற்கு முன்பு, என்னை அடிக்கடி பார்க்க அவர்கள் வந்தனர், ஆனால் நான் அதனை கண்டுக்கொள்ளவில்லை. ஒருநாள் அவர்கள் அழுது கொண்டிருக்கின்றனர் என தெரியவந்ததும், அவர்களை அழைத்து பேசினேன். அவர்களுக்கு உதவிசெய்யக் கூறி காவல் ஆணையரிடம் சொன்னேன். இதன் பிறகு என்னைப் பற்றி அடிக்கடி தவறாக பேசிவருகிறார். இதற்கு சட்டப்படி என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்வோம்” என்றார்.