ராஜஸ்தானில் வேட்புமனுத் தாக்கல் செய்த சோனியா காந்தி
ராஜஸ்தானில் வேட்புமனுத் தாக்கல் செய்த சோனியா காந்தி ANI
இந்தியா

மக்களவைத் தேர்தலில் போட்டியிடாதது ஏன்?: சோனியா காந்தி விளக்கம்

கிழக்கு நியூஸ்

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஜஸ்தானிலிருந்து வேட்புமனுத் தாக்கல் செய்த சோனியா காந்தி, மக்களவைத் தேர்தலில் போட்டியிடாதது குறித்து கடிதம் எழுதியுள்ளார்.

1998 முதல் 2022 வரை காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி, உத்தரப் பிரதேசத்தின் ரே பரலி தொகுதியிலிருந்து 5 முறை மக்களவைக்குத் தேர்வானார். ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சோனியா காந்தி இந்த முறை மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடாதது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

"எனது உடல்நலன் மற்றும் வயது காரணமாக நான் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த முடிவு காரணமாக என்னால் உங்களுக்கு நேரடியாக சேவையாற்ற முடியாது. ஆனால், நான் எப்போதும் உங்களுடன் தான் இருப்பேன். கடந்த காலங்களைப்போல வரும் காலங்களிலும் எனக்கும், எனது குடும்பத்துக்கும் நீங்கள் துணையாக இருப்பீர்கள்."

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் சோனியா காந்தி போட்டியிட்டு வந்த ரே பரலி தொகுதியில் பிரியங்கா காந்தி வதேரா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.