ANI
இந்தியா

விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

கிழக்கு நியூஸ்

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மே 2009-ல் இலங்கை ராணுவத்தால் விடுதலைப் புலிகள் அமைப்பு வீழ்த்தப்பட்டாலும், இன்னும் தனி ஈழம் என்ற நிலைப்பாட்டை அவர்கள் கைவிடவில்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் அமைப்பின் கொள்கைகளைப் பரப்புவது, இயக்கத்தினரை ஒன்றிணைப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருவதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1991 ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு, இந்தியாவில் விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டது. அப்போதிலிருந்து ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்தத் தடையானது நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக 2019-ல் விடுதலைப் புலிகளுக்கானத் தடை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.