ANI
இந்தியா

கோவாவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: தரவுகளை முன்வைத்த சுற்றுலாத் துறை! | Goa

54 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத் துறை தகவல்.

கிழக்கு நியூஸ்

கோவாவுக்கு 2025-ன் முதல் பாதியில் 54 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாக அம்மாநில சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது.

கோவா சுற்றுலாத் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் வெளியான தரவுகள்:

ஜனவரி

  • மொத்த சுற்றுலாப் பயணிகள்: 10.56 லட்சம்

  • உள்நாட்டுப் பயணிகள்: 9.86 லட்சம்

  • வெளிநாட்டினர்: 70,000

பிப்ரவரி

  • மொத்த சுற்றுலாப் பயணிகள்: 9.05 லட்சம்

  • உள்நாட்டுப் பயணிகள்: 8.44 லட்சம்

  • வெளிநாட்டினர்: 61,000

மார்ச்

  • மொத்த சுற்றுலாப் பயணிகள்: 8.89 லட்சம்

  • உள்நாட்டுப் பயணிகள்: 8.32 லட்சம்

  • வெளிநாட்டினர்: 56,000

ஏப்ரல்

  • மொத்த சுற்றுலாப் பயணிகள்: 8.42 லட்சம்

  • உள்நாட்டுப் பயணிகள்: 8.14 லட்சம்

  • வெளிநாட்டினர்: 28,000

மே

  • மொத்த சுற்றுலாப் பயணிகள்: 9.27 லட்சம்

  • உள்நாட்டுப் பயணிகள்: 8.97 லட்சம்

  • வெளிநாட்டினர்: 30,000

ஜூன்

  • மொத்த சுற்றுலாப் பயணிகள்: 8.34 லட்சம்

  • உள்நாட்டுப் பயணிகள்: 8.08 லட்சம்

  • வெளிநாட்டினர்: 25,000

மொத்தத்தில், 2025 முதல் பாதியில் மொத்தம் 54 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கோவாவுக்கு வருகை தந்துள்ளதாக அம்மாநில சுற்றுலாத் துறை தரவுகள் கூறுகிறது. இவர்களில் 51.8 லட்சம் பேர் உள்நாட்டுப் பயணிகள் 2.7 லட்சம் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.

கடந்தாண்டைக் காட்டிலும் 9 சதவீதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக சுற்றுலாத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 முதல் பாதியில் 50 லட்சத்துக்கும் குறைவாக 49.9 லட்சம் சுற்றுலாப் பயணிகள் மட்டுமே கோவாவுக்குச் சென்றுள்ளார்கள்.

Goa | Goa Tourism | Foreigners