இந்தியா

தில்லி மதுபானக் கொள்கை: கெஜ்ரிவால், கவிதா நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

கிழக்கு நியூஸ்

தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிஆர்எஸ் தலைவர் கே கவிதா ஆகியோரது நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தில்லி மதுபானக் கொள்கை தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதே வழக்கில் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிபிஐ தொடர்ந்த வழக்கில் மே 20 வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ல் கைது செய்யப்பட்டார். கவிதா மார்ச் 15-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 11-ல் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார்.

கவிதாவுக்கு அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்துள்ள இரு வழக்குகளிலும் பிணை வழங்க தில்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று மறுப்பு தெரிவித்தது.