இந்தியா

எலான் மஸ்கின் இந்தியப் பயணம் ஒத்திவைப்பு!

கிழக்கு நியூஸ்

டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் இந்தியா வருவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் முதன்முறையாக இந்தியா வர திட்டமிட்டிருந்தார். இந்தப் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமருடனான சந்திப்பை எதிர்நோக்கி இருப்பதாக அவர் கடந்த வாரம் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆட்டோமொபைல் துறையில் முதலீடு செய்வது உள்ளிட்ட இந்தியாவுக்கான இவருடையத் திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், அடுத்த மாத தொடக்கத்தில் திட்டமிடப்பட்டிருந்த இவருடைய இந்தியப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் கடுமையான பணிகள் காரணமாக இந்தியப் பயணம் ஒத்திவைக்கப்படுவதாக எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் அவர் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் செமிகண்டக்டர் சிப்களை கொள்முதல் செய்ய டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாகத் தகவல் வெளியாகின. ஒப்பந்தம் குறித்து டெஸ்லா மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.