நவீன் பட்நாயக் ANI
இந்தியா

ஒடிஷாவில் பாஜக ஆட்சி: முடிவுக்கு வந்த நவீன் பட்நாயக்கின் வெற்றிப் பயணம்

யோகேஷ் குமார்

ஒடிஷாவில் பாஜக வெற்றி பெற்ற நிலையில் 24 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

ஒடிஷா சட்டப்பேரவைத் தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளத்தை வீழ்த்தி பாஜக முதல் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. ஒடிஷா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து 147 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், பிஜூ ஜனதா தளத்தை எதிர்த்து பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன.

இதில் பிஜூ ஜனதா தளம் 51 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வி கண்டது. பாஜக 78 தொகுதிகளைக் கைப்பற்றி முதல் முறையாக அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதன் மூலம், நவீன் பட்நாயக் 6-வது முறையாக முதல்வராகும் வாய்ப்பை இழந்தார். கடந்த 2000-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 5 முறை சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று முதல்வராகப் பணியாற்றினார் நவீன் பட்நாயக். இந்நிலையில் இத்தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து நவீன் பட்நாயக்கின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.