6-ம் கட்டத் தேர்தல் ANI
இந்தியா

6-ம் கட்டத் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 10.82% வாக்குப்பதிவு

அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 16.64% வாக்குகள் பதிவாகியுள்ளன.

யோகேஷ் குமார்

மக்களவைத் தேர்தலுக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்களிலுள்ள 58 தொகுதிகளுக்கு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி மொத்தம் 10.82% வாக்குகள் பதிவாகியுள்ளன.

உத்தர பிரதேசம்: 12.33%

பிஹார்: 9.66%

ஹரியாணா: 8.31%

மேற்கு வங்கம்: 16.64%

உத்தரப் பிரதேசம்: 12.33%

தில்லி: 8.94%

ஒடிஷா: 7.43%

ஜார்க்கண்ட்: 11.74%

ஜம்மு & காஷ்மீர்: 8.89%

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், கபில் தேவ் எனப் பலரும் வாக்களித்தனர்.