இரண்டாம் கட்டத் தேர்தல் ANI
இந்தியா

இரண்டாம் கட்டத் தேர்தல்: வாக்களித்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள்

மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.

யோகேஷ் குமார்

மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. பகல் 1 மணி நிலவரப்படி 39.1% வாக்குகள் பதிவாகியுள்ளன.

அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் வாக்களித்து வருகிறார்கள்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜவகல் ஸ்ரீநாத் மைசூரில் தனது வாக்கை செலுத்தினார்.

வாக்களித்தப் பின் அவர் பேசியதாவது: “வாக்களிப்பது நமது கடமை. இதுவரை 50 % மக்கள் வாக்களித்துள்ளனர் என்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பெங்களூருவில் தனது வாக்கை செலுத்தினார்.

நடிகர்கள் மம்முட்டி, ஃபகத் பாஸில், தொவினோ தாமஸ் ஆகியோர் கேரளத்தில் வாக்களித்தனர்.