தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய விவரங்களை தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய அனைத்து தரவுகளையும் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது.
இந்த விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளை மீண்டும் நடைபெறுகிறது.
தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய தரவுகளுக்கான இணைப்பு: இங்கே க்ளிக் செய்யவும்..
லாட்டரி மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ், கிராசிம் இன்டஸ்ட்ரீஸ், மேகா இன்ஜினியரிங், டோரன்ட் பவர், பாரதி ஏர்டெல், டிஎல்எஃப் கமெர்ஷியல் டெவலப்பர்ஸ், வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கியுள்ளன.
அமலாக்கத் துறை விசாரணையின் வளையத்துக்குள் இருந்த லாட்டரி மார்ட்டினின் நிறுவனம், விசாரணை வளையத்துக்குள் இருந்த அதேகாலகட்டத்தில் பல கோடி கணக்கில் நன்கொடை வழங்கியுள்ளது. கொரோனா தடுப்பு மருந்தைத் தயாரித்த சீரம் இன்ஸ்ட்டிடியூட் நன்கொடை வழங்கியுள்ளது.
பாஜக, அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ், அதிமுக, திமுக, சிவசேனை, தெலுங்கு தேசம், பிஆர்எஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றுள்ளன.