கோப்புப்படம் ANI
இந்தியா

அமலாக்கத் துறை சோதனை: இந்தியா சிமெண்ட்ஸ் விளக்கம்

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்ட விதிமீறல் காரணமாக இந்தியா சிமெண்ட்ஸ் கார்ப்பரேட் அலுவலகத்தில் அமலாக்கத் துறை கடந்த இரு நாள்களாக சோதனை நடத்தியது.

கிழக்கு நியூஸ்

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்ட விதிமீறல் காரணமாக இந்தியா சிமெண்ட்ஸ் கார்ப்பரேட் அலுவலகத்தில் அமலாக்கத் துறை கடந்த இரு நாள்களாக சோதனை நடத்தியது.

சென்னை மற்றும் தில்லியிலுள்ள அலுவலகத்தில் சோதனை நடைபெற்றதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸ் கேபிடல் லிமிடெட் நிறுவனம் மற்றும் வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பியது தொடர்பாக சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அமலாக்கத் துறையின் இந்தச் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும், அதிகாரிகள் கோரிய உரிய ஆவணங்கள் அனைத்தையும் வழங்கியதாகவும் சோதனை தொடர்பாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.