இந்தியா

அபாயக் கட்டத்தைத் தாண்டிய தில்லி காற்று மாசுபாடு அளவு!

ஆனந்த் விஹாரியில் 419, ஜகாங்கிரிபூரியில் 395, துவாரகாவில் 359 என காற்று மாசுபாடு அளவு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது.

யோகேஷ் குமார்

தீபாவளியன்று, தில்லியில் காற்று மாசுபாடு அளவு 331 என்கிற அபாயக் கட்டத்தைத் தாண்டியுள்ளது.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை அதிகளவில் வெடிப்பதால் காற்று பெருமளவில் மாசுபடும். இந்நிலையில் தில்லியில் காற்று மாசுபாடு அளவு 331 என்கிற அபாயக் கட்டத்தைத் தாண்டியுள்ளது.

குறிப்பாக, ஆனந்த் விஹாரியில் 419, ஜகாங்கிரிபூரியில் 395, துவாரகாவில் 359 என காற்று மாசுபாடு அளவு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது.

பொதுவாக, காற்று மாசுபாடு குறியீடு 50 வரை இருந்தால் மட்டுமே நல்லது என்றும் 100 வரைக்கும் இருந்தால் பரவாயில்லை என்றும், 200-300 அளவைத் தாண்டிவிட்டால் மோசமான நிலை என்றும், 301-400 மிக மோசம் என்றும் 401-க்கு மேல் இருந்தால் தீவிரமான நிலை என்றும் குறிப்பிடப்படுகிறது.