ANI
இந்தியா

தில்லியில் 52.3 டிகிரி அளவுக்கு வெப்பம் பதிவு

கிழக்கு நியூஸ்

தில்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு 52.3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இன்று வெப்பம் பதிவாகியுள்ளது.

தில்லியில் வானிலை ஆய்வு மைய அலுவலகம் முங்கேஷ்பூர் என்ற பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பிற்பகல் 2.30 மணிக்கு 52.3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முங்கேஷ்பூர், நரேலா மற்றும் நஜஃப்கார் ஆகிய வானிலை ஆய்வு மைய அலுவலகங்களில் சமீப நாள்களாக அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. நேற்று 50 டிகிரி செல்சியஸை (49.9 டிகிரி) நெருங்கிய நிலையில் இன்று அதிகபட்சமாக 52.3 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது.

முங்கேஷ்பூரைத் தொடர்ந்து, நஜஃப்கார் பகுதியில் 49.8 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இன்று வெப்பம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக தில்லியில் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான வெப்ப அலைகளுக்கு எதிரான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தில்லி வாசிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.