இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு!

கிழக்கு நியூஸ்

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 23 வரை நீட்டித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். 10 நாள்களுக்கு அமலாக்கத் துறை காவலில் இருந்த கெஜ்ரிவாலை ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அமலாக்கத் துறை காவல் இன்றுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்றக் காவலை ஏப்ரல் 23 வரை நீட்டித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, தனது கைது நடவடிக்கை மற்றும் நீதிமன்றக் காவலை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது அல்ல என்று தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஏப்ரல் 24-க்குள் மனு மீது பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கு வரும் 29-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.