கோப்புப்படம்
கோப்புப்படம் ANI
இந்தியா

மேற்கு வங்கத்தில் ஒற்றுமைக்கான நடைப்பயணம்: ராகுல் காந்தி உரை

கிழக்கு நியூஸ்

மேற்கு வங்கத்தில் திரிணமூல் தனித்துப் போட்டியிடும் என மமதா பானர்ஜி அறிவித்துள்ள நிலையில், ராகுல் காந்தியின் ஒற்றுமைக்கான நடைப்பயணம் மேற்கு வங்கத்தை அடைந்துள்ளது.

மணிப்பூரில் தொடங்கிய ராகுல் காந்தியின் ஒற்றுமைக்கான நடைப்பயணம் மும்பையில் நிறைவடையவிருக்கிறது. இந்த நடைப்பயணம் அசாமிலிருந்து மேற்கு வங்கத்துக்குள் நுழைந்துள்ளது. அங்கு திரிணமூல் தனித்துப் போட்டியிடும் என மமதா பானர்ஜி அறிவித்த நிலையிலும், நடைப்பயணம் குறித்து மரியாதைக்குக் கூட ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை என விமர்சித்த நிலையிலும் ராகுல் மேற்கு வங்கத்துக்குள் நுழைந்துள்ளார்.

அங்கு உரையாற்றிய ராகுல் காந்தி, அநீதிக்கு எதிராக இண்டியா கூட்டணி ஒருங்கிணைந்து எதிர்கொள்ளும் என்றார்.

அவர் மேலும் கூறியதாவது:

மேற்கு வங்கத்துக்கு வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. உங்களது குரல்களைக் கேட்டு உங்களுடன் துணை நிற்க நாங்கள் இங்கு வந்துள்ளோம். பாஜவும், ஆர்எஸ்எஸ் வெறுப்பு, வன்முறை மற்றும் அநீதியைப் பரப்புகின்றன. இதன் காரணமாகவே, இந்த நடைப்பயணத்தில் அநீதி என்கிற சொல்லையும் இணைத்துள்ளோம். எனவே, இண்டியா கூட்டணி ஒன்றிணைந்து அநீதிக்கு எதிராகப் போராடும்."

மமதாவின் அறிவிப்புக்குப் பிறகு அவரைச் சமாதானப்படுத்தும் வகையில், இண்டியா கூட்டணியின் முக்கியமானத் தூண் மமதா என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். தற்போது இண்டியா கூட்டணி ஒன்றிணைந்து போராடும் என ராகுல் காந்தியும் தெரிவித்திருக்கிறார்.