இந்தியா

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: தேர்தல் பிரசாரம் நிறைவு

கிழக்கு நியூஸ்

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 89 தொகுதிகளில் இன்று மாலை தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.

நாடு முழுக்க மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டிலுள்ள 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏறத்தாழ 62 சதவீத வாக்குகள் பதிவாகின.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ல் நடைபெறுகிறது. கேரளம், கர்நாடகம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரம் என 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த 89 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்தன.

ராகுல் காந்தி, ஓம் பிர்லா, பூபேஷ் பாகெல், ஹேமா மாலினி, தேஜஸ்வி சூர்யா, சசி தரூர், கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இரண்டாம் கட்டத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

இரண்டாம் கட்டத் தேர்தலில் கேரளத்திலுள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கர்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ராஜஸ்தானில் 13 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.