இந்தியா

கவிதாவைக் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி: தில்லி சிறப்பு நீதிமன்றம்

கிழக்கு நியூஸ்

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கவிதாவை மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-க்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள கவிதா, தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார். இதனிடையே, கவிதாவிடம் விசாரணை நடத்த சிபிஐ தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 5-ல் அனுமதி வழங்கியது.

கவிதா நேற்று பிற்பகல் 12.15 மணி முதல் சிபிஐ கட்டுப்பாட்டில் இருப்பதாக கவிதா தரப்பு வழக்கறிஞர் குழு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, இவர் கவிதாவை தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்திய சிபிஐ, இவரை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியது. ஆனால், தில்லி சிறப்பு நீதிமன்றம் இவரை மூன்று நாள்கள் மட்டுமே காவில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இந்த வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 15-ல் கைது செய்யப்பட்டார் கவிதா.