இந்தியா

தில்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு முயற்சி: அமைச்சர் அடிஷி

கிழக்கு நியூஸ்

தில்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருவதாக தில்லி அமைச்சர் அடிஷி தெரிவித்துள்ளார்.

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கைக்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார் கெஜ்ரிவால். இவரது மனுவை தில்லி உயர் நீதிமன்றம் கடந்த 21 அன்று தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்துள்ளார்.

தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"தில்லி அரசு அதிகாரிகள் கூட்டங்களில் கலந்துகொள்வதை நிறுத்திவிட்டார்கள். இதுபோன்ற சம்பவங்கள் அரவிந்த் கெஜ்ரிவால் அரசைக் கவிழ்த்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கான சதித் திட்டம் நிகழ்வதை உணர்த்துகின்றன.

தில்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது சட்டவிரோதமானது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது, மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிரானது. அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மிக்கு தில்லி மக்கள் தேர்லில் முழு ஆதரவை அளித்துள்ளார்கள்" என்றார் அவர்.