ஜெ.பி. நட்டா (கோப்புப்படம்) 
இந்தியா

பாஜகவின் புதிய தேசியத் தலைவர் டிசம்பரில் நியமனம்

கிழக்கு நியூஸ்

பாஜகவின் புதிய தேசியத் தலைவர் வரும் டிசம்பர் மாதம் நியமிக்கப்படவுள்ளார்.

தேசியத் தலைவராக உள்ள ஜெ.பி. நட்டாவின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததையடுத்து, ஜூன் 2024 வரை நீட்டிக்கப்பட்டது. ஜெ.பி. நட்டா குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வாகியுள்ளார். மத்திய அமைச்சரவையிலும் இவருக்குப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கட்சியின் புதிய தேசியத் தலைவரைத் தேடும் பணியை பாஜக தொடங்கியுள்ளது.

இந்தப் பதவிக்கான தேர்தல் பணிகள் வரும் ஆகஸ்ட் 1-ல் தொடங்குகின்றன. நவம்பர் 1 முதல் 15 வரை மண்டல வாரியாகத் தலைவர்களைத் தேர்வு செய்ய பாஜக தேர்தல் நடத்தவுள்ளது. இதைத் தொடர்ந்து, நவம்பர் 16 முதல் 30 வரை மாவட்டத் தலைவர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. மாநிலத் தலைவர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைமுறை டிசம்பர் 1-ல் தொடங்கவுள்ளது. 50 சதவீத மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்தவுடன், தேசியத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான முறையான தேர்தல் நடைமுறை தொடங்கவுள்ளது.