ANI
இந்தியா

புனேவில் பொது இடங்களில் புறாக்களுக்கு உணவளித்தால் அபராதம்: காரணம் என்ன?

புனேவில் புறாக்களின் எண்ணிக்கை அதிகரிப்பால்...

யோகேஷ் குமார்

புனேவில் பொது இடங்களில் புறாக்களுக்கு உணவளித்தால் அபராதம் விதிக்கப்படும் என புனே மாநகராட்சி அறிவித்துள்ளது.

பொது இடங்களில் புறாகளுக்கு உணவளிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாகக் கூறப்படுகிறது.

புறாக்களின் எச்சங்கள் மூலம் மனிதர்களுக்கு நுரையீரல் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் புனேவில் புறாக்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், இது தொடர்பாக புனே மாநகராட்சி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, புனேவில் பொது இடங்களில் புறாக்களுக்கு உணவளித்தால் அபராதம் விதிக்கப்படும் என புனே மாநகராட்சி அறிவித்துள்ளது.