ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்கள். ANI
இந்தியா

பிஹார் தேர்தல்: இண்டியா கூட்டணி வெளியிட்ட தேர்தல் அறிக்கை! | Bihar Election | INDIA Alliance |

டிசம்பர் முதல் பெண்களுக்கு மாதந்தோறும் தலா ரூ. 2,500 வழங்கப்படும்.

கிழக்கு நியூஸ்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இண்டியா கூட்டணி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பிஹாரிலுள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய நாள்களில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி இண்டியா கூட்டணியின் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

இண்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் தலைவர் பவன் கெரா, விகாஷீல் இன்சான் கட்சித் தலைவரும் துணை முதல்வர் வேட்பாளருமான முகேஷ் சஹானி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) (லிபரேஷன்) பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்கள்.

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்

  • போட்டித் தேர்வுகளுக்கான படிவங்கள் மற்றும் தேர்வுக் கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.

  • தேர்வு மையங்களுக்கு இலவசமாகச் சென்று வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

  • கேள்வித் தாள் கசிவதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

  • வேலைவாய்ப்பில் பிஹாரில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.

  • மாதந்தோறும் நிதியுதவி வழங்க மற்றும் திறன் பயிற்சி அளிப்பதற்காக தொழிலாளர் கணக்கெடுப்பு நடத்தப்படும்.

  • வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம்.

  • 100 நாள் வேலைத் திட்டம் 200 நாள்களாக உயர்த்தப்படும். தினச் சம்பளம் நாளொன்றுக்கு ரூ. 255-ல் இருந்து ரூ. 300 ஆக உடனடியாக உயர்த்தப்படும். தினச் சம்பளத்தை நாளொன்றுக்கு ரூ. 400 ஆக உயர்த்த மத்திய அரசு மீது அழுத்தம் தரப்படும்.

  • டிசம்பர் முதல் பெண்களுக்கு மாதந்தோறும் தலா ரூ. 2,500 வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ. 30,000 வழங்கப்படும்.

  • கைம்பெண்களுக்கான சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியமாக மாதம் ரூ. 1,500 வழங்கப்படும்.

  • மாற்றுத் திறனாளிகளுக்குத் தனி துறை உருவாக்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ. 3,000 வழங்கப்படும்.

  • வக்ஃபு திருத்தச் சட்டம் நிறுத்தி வைக்கப்படும்.

With less than ten days left for the Bihar Assembly elections, the Mahagathbandhan, led by the Rashtriya Janata Dal (RJD) and Congress, on Tuesday released its manifesto titled 'Bihar Ka Tejashwi Pran', outlining key promises ahead of the polls.

Bihar Election | INDIA Alliance | Rashtriya Janata Dal | Tejashwi Yadav | Election Manifesto |