உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பூடான் பிரதமர் டஷோ ஷெரிங் தோப்கே ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
இந்தியா வருகை தந்துள்ள பூடான் பிரதமர் டஷோ ஷெரிங் தோப்கே, இன்று காலை 9:30 மணி அளவில் அயோத்தி விமான நிலையத்திற்கு தன் மனைவியுடன் வந்தடைந்தார். அப்போது அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு உத்தரபிரதேச அமைச்சர் சூரிய பிரதாப் சாஹி, அயோத்தி மேயர் கிரிஷ் பதி திரிபாதி உள்ளிட்டோர் உடன் இருந்து அவரை வரவேற்றனர்.
பின்னர், விமான நிலையத்தில் இருந்து அலகாபாத் மற்றும் லக்னோ-கோரக்பூர் நெடுஞ்சாலைகள் வழியாக சாலை மார்க்கமாக அயோத்தி ராமர் கோவிலுக்குச் சென்றார் டஷோ ஷெரிங் தோப்கே. அங்கு, ராமர் கோயில், ஹனுமன்கரி மற்றும் அயோத்தியில் உள்ள பிற முக்கிய கோயில்களில் தரிசனம் செய்தார். அவரது வருகையைச் சிறப்பிக்கும் விதமாகச் சிறப்பு மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பூடான் பிரதமர் தோப்கே, தரிசனத்தை முடித்துக் கொண்டு அயோத்தியில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டார். அவரது வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
Dasho Tshering Tobgay | Bhutan Prime Minister | Bhutan PM | Ayodhya