ஜோர்ஹத் நகரில் நடைப் பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி
ஜோர்ஹத் நகரில் நடைப் பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி ANI
இந்தியா

ராகுல் காந்தி நடைப் பயணம்: அஸ்ஸாமில் வழக்குப் பதிவு

கிழக்கு நியூஸ்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொள்ளும் ஒற்றுமைக்கான நடைப் பயணத்தைச் சேர்ந்த சிலர், அனுமதிக்கப்பட்ட பாதைக்குப் பதில் மாற்றுப் பாதையில் சென்றதாக ஜோர்ஹத் காவல் துறையினர் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஒற்றுமைக்கான நடைப் பயணம் வியாழக்கிழமை அஸ்ஸாைமை வந்தடைந்தது. இந்த நடைப் பயணமானது அஸ்ஸாமின் ஜோர்ஹத் நகரில் அனுமதி வழங்கப்பட்ட சாலையிலிருந்து விலகி மாற்றுப் பாதையில் சென்றதால், அங்கு அசாதாரண சூழல் நிலவியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன் காரணமாக, ஒற்றுமைக்கான நடைப் பயணத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் இதன் தலைமை ஏற்பாட்டாளர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைப் பயணத்தில் 67 நாள்களில் 110 மாவட்டங்கள் வழியாக 6,700 கி.மீ. தூரத்தைக் கடக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒற்றுமைக்கான நடைப் பயணமானது மார்ச் 20-ல் மும்பையில் நிறைவடையவுள்ளது.