இந்தியா

கேரட்டால் நடந்த வாக்குவாதம்: ஒருவர் உயிரிழப்பு, இருவர் கைது!

வாக்குவாதத்தை தடுக்கச் சென்ற வியாபாரி எதிர்பாராத வகையில்..

யோகேஷ் குமார்

கேரளத்தில் காய்கறி வியாபாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பத்தனமிட்டா மாவட்டம் ரன்னியில் உள்ள ஒரு காய்கறி கடைக்கு நேற்றிரவு (ஆகஸ்ட் 26) இரண்டு நபர்கள் குடிபோதையில் வந்ததாகக் கூறப்படுகிறது.

இரண்டு நபர்களில் ஒருவர் கடையில் இருக்கும் கேரட் ஒன்றை எடுத்து கடித்ததாகவும், அதற்கு அக்கடையில் பணிபுரியும் பெண் கேரட்டின் விலையை குறிப்பிட்டு அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அந்த இரு நபர்களும் அந்த பெண்ணை கத்தியால் தாக்க முயற்சி செய்துள்ளனர். அவர்களைத் தடுக்கச் சென்றதில் அக்கடையின் வியாபாரி அனில் என்பவர் எதிர்பாராத வகையில் உயிரிழந்தார். மேலும், அந்த பணிப்பெண் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குடிபோதையில் வந்த அந்த இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.