இந்தியா

பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள்: ஜெர்சி பரிசளித்த மெஸ்ஸி | PM Modi | Lionel Messi |

வரும் டிசம்பரில் இந்தியா வரும் மெஸ்ஸி, பிரதமரைச் சந்திப்பார் என்றும் தகவல்...

கிழக்கு நியூஸ்

பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு தனது கையொப்பமிட்ட ஜெர்சியைக் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி பரிசாக அனுப்பியுள்ளார்.

வரும் செப்டம்பர் 17-ல் பிரதமர் மோடி தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி பரிசு ஒன்றை அனுப்பியுள்ளார். 2022-ல் பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி அணிந்திருந்த ஜெர்ஸி உலகப் புகழ் பெற்றதாகும்.

இந்நிலையில், அந்த ஜெர்சியில் தனது கையொப்பம் இட்டு பிரதமர் மோடிக்கு 75-வது பிறந்தநாள் பரிசாக மெஸ்ஸி அனுப்பியுள்ளார். வரும் டிசம்பர் 13 - 15 வரை மெஸ்ஸி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அவர் பிரதமர் மோடியை நேரில் சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.

Narendra Modi | PM Modi | Lionel Messi | Messi Gifted Modi |