காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகாவின் ஆலந்த் சட்டமன்ற தொகுதியில் வாக்குத் திருட்டு நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டினார். வலைத்தளம் மூலம் வாக்குகளை நீக்கியிருக்கிறார்கள் என்றும், வாக்குகளைத் திருடுபவர்களைத் தலைமைத் தேர்தல் ஆணையர் காப்பாற்றுகிறார் என்றும் பேசினார்.
இந்நிலையில், ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் தவறானவை எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பதிவில்,
“ராகுல் காந்தி வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை. ஆதாரமற்றவை. அவர் நினைப்பது போல் எந்த வாக்காளரையும் இணையதளம் மூலம் பொதுமக்களில் யாராலும் நீக்க முடியாது. 2023-ல் ஆலந்த் சட்டமன்ற தொகுதியில் 2023-ல் வாக்குகளை நீக்குவதற்கான பலமுறை நடந்த நிகழ்ச்சிகள் தோல்வி அடைந்துள்ளன. அதை விசாரிக்க தேர்தல் ஆணையம் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யக் கோரியுள்ளது. அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி ஆலந்த் சட்டமன்ற தொகுதியில் 2018-ல் பாஜகவைச் சேர்ந்த சுபாத் குட்டேதாரும் 2023-ல் பி.ஆர் பாட்டீல் ஆகியோர்தான் வெற்றி பெற்றார்கள்”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.