படம்: எக்ஸ் தளம் | ராகவ் சத்தா
இந்தியா

ஆம் ஆத்மியின் மாநிலங்களவைக் குழுத் தலைவராக ராகவ் சத்தா நியமனம்

சுவாமிநாதன்

ஆம் ஆத்மி கட்சியினுடைய மாநிலங்களவைக் குழுத் தலைவராக சஞ்சய் சிங்குக்குப் பதில் ராகவ் சத்தா நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியினுடைய மாநிலங்களவைக் குழுத் தலைவராக உள்ள சஞ்சய் சிங்குக்கு உடல்நலம் குன்றியுள்ளதால், அவர் இல்லாதபட்சத்தில் ராகவ் சத்தா மாநிலங்களவைக் குழுத் தலைவராக செயல்படுவது குறித்து கட்சித் தலைமை மாநிலங்களவைத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளது. தில்லி அரசின் மதுபானக் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் தற்போது சிறையில் உள்ளார்.

இதுதொடர்புடைய, ஆம் ஆத்மியின் கடிதத்தைப் பெற்றுள்ளதாக மாநிலங்களவைச் செயலர் உறுதிபடுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களவையில் ஆம் ஆத்மிக்கு மொத்தம் 10 எம்.பி.க்கள் உள்ளார்கள். இதில் ராகவ் சத்தா தான் வயதில் குறைவானவர். பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் அடுத்து மாநிலங்களவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சி ஆம் ஆத்மி.