தில்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குழந்தைகள் மூவர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
தில்லியின் தென்மேற்கில் உள்ள பாலம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று காலை திடீரெனத் தீப்பிடித்தது. தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே தீ வேகமாகப் பரவியது. இதனால் கட்டடத்திற்குள் பலர் சிக்கிக் கொண்டனர்.
9 பேர் உயிரிழப்பு
இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், கடுமையாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மறுபுறம் கட்டடத்திற்குள் சிக்கியவர்கள் மீட்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதில் மூச்சுத் திணறல் மட்டும் தீக்காயங்கள் காரணமாக குழந்தைகள் மூவர் உட்பட 9 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் வருத்தம்
இச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள தில்லி முதலமைச்சர் ரேகா குப்தா, தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
“பாலம் பகுதியில் உள்ள ஒரு பலமாடி குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான தீ விபத்து குறித்து மிகுந்த மன உளைச்சலுடன் அறிந்தேன். பெறப்பட்ட தகவலின்படி, 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது; கட்டடத்தின் உள்ளே இன்னும் சிலர் சிக்கியுள்ளனர். மாவட்ட நிர்வாகம், தில்லி தீயணைப்புத் துறை மற்றும் தில்லி காவல்துறையைச் சேர்ந்தவர்கள் மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவரது பாதுகாப்பிற்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், தில்லி காவல்துறை இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Over nine people have died in the fire that broke out in a residential building in the Sadh Nagar area of Palam, police said on Wednesday. Delhi Fire Services stated that around 30 fire brigades had arrived at the spot after receiving the information and were engaged in dousing the blaze.