தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மேற்கு வங்கம், புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய மூன்று இடங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதன்முறை பாஜக ஆட்சி
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குக் கடந்த ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய நாள்களில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 92.47% வாக்குகள் பதிவாகின. இரண்டாம் கட்டத்தில் நடைபெற்ற ஃபால்டா தொகுதியில் நடைபெற்ற முறைகேடு காரணமாக அங்கு ஏப்ரல் 29 அன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. அதில் மாலை 7 மணி நிலவரப்படி பாஜக 208 இடங்களில் முன்னிலையில் உள்ளது. எதிரில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் 79 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. கடந்த தேர்தலில் பாஜக 77 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. இம்முறை 130-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இதன்மூலம் பாஜக மேற்கு வங்கத்தில் முதன்முறையாக ஆட்சியைப் பிடிக்கிறது. அம்மாநிலத்தின் பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி முதலமைச்சர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பவானிபூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் சுவேந்து அதிகாரியை விட 500 வாக்குகளில் பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.
கேரளத்தில் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ் கூட்டணி
கேரளத்தில் மொத்தமுள்ள 140 சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 9 அன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில், 78.27% வாக்குகள் பதிவாகின. இவற்றை எண்ணும் பணி இன்று மொத்தம் 43 மையங்களில் நடந்தன. இதில், மாலை 7 மணி நிலவரப்படி ஐக்கிய ஜனநாயக முன்னணி 90-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 63, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 22, கேரள காங்கிரஸ் 7, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி 3, புரட்சிகர இந்திய மார்க்ஸிஸ்ட் கட்சி 1, கேரள காங்கிரஸ் (ஜேக்கப்) 1 தொகுதிகளைக் கைப்பற்றும் நிலையில் உள்ளன. ஆட்சி அமைக்க 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் எனும் நிலையில், இக்கூட்டணி 90-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளதால் காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சி உறுதியாகியுள்ளது. இடது ஜனநாயக முன்னனியில் உள்ள மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 26 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8 இடங்களையும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 1 தொகுதியையும் கைப்பற்ற உள்ளது. இக்கூட்டணி 35 இடங்களை மட்டுமே கைப்பற்றும் நிலையில் உள்ளது. இதனால் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கட்சியாக அமரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் ஆட்சியை இழந்ததன் மூலம் இடதுசாரிகள் நாட்டில் எங்கும் ஆட்சியில் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
அஸ்ஸாமில் மீண்டும் பாஜக ஆட்சி
அஸ்ஸாம் மாநிலத்தைப் பொருத்தவரை மொத்தமுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 9 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க 64 இடங்கள் தேவை என்ற நிலையில், மாலை 7 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதில் 81 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் பாஜக அஸ்ஸாமில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. அஸ்ஸாம் மாநில முன்னாள் முதலமைச்சரும் பாஜக தலைவருமான ஹிமந்த பிஸ்வா சர்மா மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரியில் தொடரும் என்.ஆர் காங்கிரஸ்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. புதுச்சேரி தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக 90.46% வாக்குகள் பதிவாகியுள்ளது. இவற்றை எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்றது. புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் என். ஆர் காங்கிரஸ் தலைமையிலான பாஜக மற்றும் லட்சிய ஜனநாயக கட்சி கூட்டணி, காங்கிரஸ் - திமுக கூட்டணி, தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் ஆகியவை தனித்தும் களம் கண்டனர். இந்நிலையில் மாலை 7 மணி நிலவரப்படி என்.ஆர் காங்கிரஸ் கட்சி 11 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கிறது.
In the assembly elections held across four states—including Tamil Nadu—and one Union Territory, the BJP has secured power in three regions: West Bengal, Puducherry, and Assam. In Kerala, the Congress alliance has emerged victorious.