இந்தியா

பிரதமர் மோடியின் 25-வது சர்வதேச விருது!

இதற்கு முன்னதாக, கானா நாட்டின் மிக உயரிய, `தி ஆபிஸர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா’ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

ராம் அப்பண்ணசாமி

அரசு முறை சுற்றுப்பயணமாக டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டிற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய, `ஆர்டர் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட் அண்ட் டொபாகோ’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

5 நாடுகள் சுற்றுப் பயணத்தின் தொடக்கமாக கடந்த ஜூலை 2-ல் இந்தியாவில் இருந்து கிளம்பி, ஆப்பிரிக்க நாடான கானாவிற்குச் சென்றார் பிரதமர் மோடி. அவருக்கு, கானா நாட்டின் மிக உயரிய, `தி ஆபிஸர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா’ விருதை வழங்கி அதிபர் ஜான் மஹாமா கௌரவித்தார்.

இதைத் தொடர்ந்து, கரீபியன் தீவுகள் கூட்டமைப்பைச் சேர்ந்த டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டிற்குப் பிரதமர் மோடி சென்றார்.

அவருக்கு, அந்நாட்டின் மிக உயரிய, `ஆர்டர் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட் அண்ட் டொபாகோ’ விருதை வழங்கி, அதிபர் கிறிஸ்டின் கங்காலூ கௌரவித்தார். இது மோடிக்கு வழங்கப்பட்ட 25வது சர்வதேச விருதாகும்.

இதுவரை சௌதி அரேபியா, ஆஃப்கானிஸ்தான், பாலஸ்தீனம், மாலத்தீவு, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், அமெரிக்கா, ஃபிஜி, பலாவ், பாப்புவா நியூ கினி, எகிப்து, பிரான்ஸ், கிரீஸ், பூடான், ரஷ்யா, நைஜீரியா, டொமினிகா, கயானா, குவைத், பார்படோஸ், மொரீஷியஸ், இலங்கை, சைப்ரஸ் ஆகிய நாடுகளும் தங்கள் உயரிய விருதுகளை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவித்துள்ளன.