கோப்புப் படம் ANI
இந்தியா

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

யோகேஷ் குமார்

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று மதியம் வெளியாகியுள்ளது. இதில் மொத்தம் 93.60% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு பிப். 15 அன்று தொடங்கி மார்ச் 13 வரை நடைபெற்றது. இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் நாடு முழுவதும் 93.60 சதவீதம் பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். கடந்த ஆண்டை விட 0.48% பேர் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தேர்வெழுதிய பெண் மாணவர்களில் 94.75 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். ஆண் மாணவர்களைவிட 2.04 சதவீதம் கூடுதலாக பெண் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளார்கள்.

தேர்வெழுதியவர்களில் 92.71 சதவீத ஆண் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 99.75 சதவீதமும், சென்னையில் 99.30% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முன்னதாக இன்று காலை சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதிலும் திருவனந்தபுரம் 99.91 சதவீதத்துடன் முதலிடத்தை பிடித்தது.