விளையாட்டு

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: இறுதிச் சுற்றில் நீரஜ் சோப்ரா!

தகுதிச் சுற்றில் 89.34 மீ. தூரம் வீசி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

யோகேஷ் குமார்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றுக்கு நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தாா். இறுதிச்சுற்றில் அவா் 87.58 மீட்டா் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தாா்.

இந்நிலையில் இந்த ஒலிம்பிக்ஸில் இவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. 11-வது நாளான இன்று ஈட்டி எறிதல் விளையாட்டின் தகுதிச் சுற்று நடைபெற்றது.

84 மீட்டருக்கு அதிகமாக வீசும் பட்சத்தில் ஒரு வீரர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவார். இதில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா 89.34 மீ. தூரம் வீசி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

மேலும், ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில் நீண்ட தூரம் வீசியவர் எனும் சாதனையையும் படைத்தார் நீரஜ் சோப்ரா.