கோலியுடன் இணைந்து விளையாடியது மகிழ்ச்சியாக இருந்ததாக தோனி கூறியுள்ளார்.
தோனி மற்றும் விராட் கோலியின் காம்போவிற்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இந்நிலையில் சமீபத்தில் ஹைதராபதில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தோனி, கோலியுடனான நட்பு குறித்து பேசியுள்ளார்.
தோனி பேசியதாவது:
“நாங்கள் இருவரும் நீண்ட காலமாக இந்திய அணிக்காக விளையாடி உள்ளோம்.
உலகின் தலைச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கோலி இருக்கிறார்.
மிடில் ஓவர்களில் அவருடன் சேர்ந்து நிறைய பேட்டிங் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
நாங்கள் களத்தில் ஒன்றாக விளையாடும்போது இரண்டு மற்றும் மூன்று ரன்களை ஓடி எடுப்பது வேடிக்கையாக இருக்கும்.
ஓய்வுக்குப் பிறகு அடிக்கடி ஒருவரை சந்திப்பது கடினம்.
எனவே, நாங்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்வது இல்லை என்றாலும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வாழ்க்கையில் என்ன நடக்கிறது? என்பது குறித்து பேசுவோம். இதுதான் எங்கள் உறவு” என்றார்.