டி20 உலகக் கோப்பை தூதராக யுவராஜ் சிங் நியமனம் ANI
விளையாட்டு

டி20 உலகக் கோப்பை தூதராக யுவராஜ் சிங் நியமனம்

"6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்தது உட்பட கிரிக்கெட் உடனான எனது அழகான நினைவுகள் டி20 உலகக் கோப்பையில் தான் கிடைத்தது".

யோகேஷ் குமார்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் டி20 உலகக் கோப்பைக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை ஜூன் 1 முதல் 29 வரை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதைப் பிரபலப்படுத்தும் வகையில், யுவராஜ் சிங் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பை தொடர்பான விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்று உலகக் கோப்பையை அவர் பிரபலப்படுத்தவுள்ளார். ஏற்கெனவே உலகக் கோப்பைக்கான தூதர்களாக மே.இ. தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் மற்றும் ஒலிம்பிக்ஸ் ஜாம்பவான் உசைன் போல்ட் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இது குறித்து பேசிய யுவராஜ் சிங், “6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்தது உட்பட கிரிக்கெட் உடனான எனது அழகான நினைவுகள் டி20 உலகக் கோப்பையில் தான் கிடைத்தது. எனவே உலகக் கோப்பையில் பங்கு வகிப்பது உற்சாகமளிக்கிறது” என்றார்.