யுவராஜ் - அஃப்ரிடி காணொளி 
விளையாட்டு

நமக்கிடையிலான நட்பு தொடர வேண்டும்: யுவராஜ் - அஃப்ரிடி காணொளி

யோகேஷ் குமார்

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் முடிந்தப் பிறகு யுவராஜ் சிங் மற்றும் அஃப்ரிடி ஆகியோர் பேசிக்கொண்ட காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 2 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணி தான் விளையாடிய இரு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்தது. இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து இந்த ஆட்டம் முடிந்தப் பிறகு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும்

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடி ஆகியோர் இந்த ஆட்டத்தை குறித்து பேசினர். அதில், நமக்கிடையிலான நட்பு தொடர வேண்டும் என யுவராஜ் சிங் கூறினார். இருவரும் டி20 உலகக் கோப்பைக்கான தூதராக நியமிக்கப்பட்டனர்.

யுவராஜ் சிங் - அஃப்ரிடி பேசியது இதுதான்

யுவராஜ் சிங்: ஏன் சோகமாக இருக்கிறீர்கள்?

அஃப்ரிடி: இது நாங்கள் தோற்க வேண்டிய ஆட்டமா? வெற்றி பெற 40 ரன்கள் தேவைப்பட்ட போது நீங்கள் என்னிடம், “வாழ்த்துகள், பாகிஸ்தான் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும். நான் இனி இந்த ஆட்டத்தைப் பார்க்கப் போவதில்லை” என்று சொன்னீர்கள். அப்போது நான் இந்த ஆடுகளத்தில் 40 ரன்கள் அடிப்பது அவ்வளவு சுலபமானது அல்ல, இப்போதே எங்களை வாழ்த்த வேண்டாம் என்றேன்.

யுவராஜ் சிங்: நான் பாகிஸ்தான் வெற்றி பெறும் என்று உங்களிடன் சொன்னேன். ஆனால் இந்திய அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆட்டத்தில் வெற்றி தோல்வி சகஜம்தான். ஆனால், நமக்கிடையிலான நட்பு தொடர வேண்டும். அதுவே முக்கியமாகும்.

இவர்கள் பேசிக்கொண்ட இந்த காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.