ANI
விளையாட்டு

டபிள்யுடிசி இறுதிச் சுற்று: இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி குறைந்தது 4 ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும்.

யோகேஷ் குமார்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்ததைத் தொடர்ந்து, இந்திய அணி டபிள்யுடிசி இறுதிச் சுற்றுக்கு முன்னேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவில் ஒருமுறை டெஸ்ட் தொடரை வெல்லாத நியூசிலாந்து, இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 3-0 என வீழ்த்தி வரலாறு படைத்தது. சொந்த மண்ணில் முதல்முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் விளையாடிய 3 டெஸ்டுகளிலும் தோற்று மிகவும் மோசமான சாதனையை படைத்தது இந்தியா.

இந்நிலையில் இந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.

முதல் டெஸ்ட் நவம்பர் 22 அன்று பெர்த் நகரில் தொடங்குகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்ததைத் தொடர்ந்து இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்த இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து 2-வது இடத்துக்கு சரிந்தது.

இதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி குறைந்தது 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றில் பங்கேற்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி மீதமுள்ள 7 டெஸ்டுகளில் 4-ல் வெற்றி பெற்றால் போதுமானது. அதேபோல், இலங்கை மற்றும் தெ.ஆ. அணிகள் மீதமுள்ள 4 டெஸ்டுகளில் 3-ல் வெற்றி பெற வேண்டும். நியூசிலாந்து அணியை பொறுத்தவரை இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடவுள்ள 3 டெஸ்டுகளிலும் வெற்றி பெற வேண்டும்.