ANI
விளையாட்டு

2030, 2034 கால்பந்து உலகக் கோப்பை நடைபெறும் நாடுகள் அறிவிப்பு!

2030, 2034 உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறும் இடங்களை சர்வதேசக் கால்பந்து அமைப்பான ஃபிஃபா வெளியிட்டுள்ளது.

கிழக்கு நியூஸ்

2034 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி சவுதி அரேபியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2030, 2034 உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறும் இடங்களை சர்வதேசக் கால்பந்து அமைப்பான ஃபிஃபா வெளியிட்டுள்ளது. 2030 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியை மொரோக்கோ, போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. அதேபோல 2034 உலகக் கோப்பைப் போட்டி சவுதி அரேபியாவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2030, 2034 போட்டிகளை நடத்த வேறு எந்த நாடுகளும் விருப்பம் தெரிவிக்கவில்லை.

உலகக் கோப்பைப் போட்டியின் 100-வது வருடமான 2030-ல் நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டியில் உருகுவே, பராகுவே, அர்ஜெண்டினா நாடுகளில் ஓர் ஆட்டம் மட்டும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் போட்டி 6 நாடுகளில் 3 கண்டங்களில் நடைபெறவுள்ளது. 104 ஆட்டங்களில் 48 நாடுகள் பங்கேற்கவுள்ளன.

2022 உலகக் கோப்பை கத்தாரில் நடைபெற்றது. 2026 உலகக் கோப்பை அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடாவில் நடைபெறவுள்ளது.