படம்: https://www.instagram.com/rj.mahvash/
விளையாட்டு

யுஸ்வேந்திர சஹலுடன் காணப்பட்ட மர்மப் பெண் யார்?

34 வயது சஹலும் அவருடைய மனைவி தனஸ்ரீ வர்மாவும் விவாகரத்து பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாகச் செய்திகள் வெளியாகின.

கிழக்கு நியூஸ்

துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச்சுற்றில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய அணி. இந்த ஆட்டத்தை நேரில் காண வந்திருந்தார் பிரபல இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹல்.

34 வயது சஹலும் அவருடைய மனைவி தனஸ்ரீ வர்மாவும் கருத்துவேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகச் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் துபாய் மைதானத்தில் சஹலுடன் ஓர் இளம் பெண்ணும் அமர்ந்திருந்ததுதான் ரசிகர்களிடம் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

சஹலின் அருகில் அமர்ந்திருந்தவர் பிரபல ஆர்ஜே மெஹ்வாஷ். சமூக ஊடக இன்ப்ளூயன்சராக பலராலும் அறியப்பட்டவர். இன்ஸ்டகிராமில் இவரை 1.8 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள்.

உத்தரப் பிரதேசம், அலிகர்க்-கில் பிறந்த மெஹ்வாஷ், தில்லியில் மாஸ் கம்யூனிகேஷன் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இயல்பாகவே கலகலப்பாகப் பேசும் மெஹ்வாஷ், ரேடியோ மிர்ச்சி ஆர்ஜேவாகப் புகழ்பெற்றவர். யூடியூபிலும் தனக்கென்று தனியாக சேனல் ஒன்று வைத்துள்ளார். அமேஸான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ள இணையத் தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

கடந்த டிசம்பரில் சஹல் மற்றும் சிலருடன் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடும் புகைப்படத்தை வெளியிட்டார் மெஹ்வாஷ். இதனால் சஹலும் மெஹ்வாஷும் காதலிப்பதாக சர்ச்சைகள் உருவாகின. இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்து மெஹ்வாஷ் வெளியிட்ட பதிவில், இந்த வதந்திகள் எவ்வளவு ஆதாரமற்றவை என்பதைப் பார்க்கும்போது உண்மையில் வேடிக்கையாக இருக்கிறது. நீங்கள் எதிர்பாலினத்தைச் சேர்ந்த ஒருவருடன் காணப்பட்டால், நீங்கள் அவரைக் காதலிக்கிறீர்கள் என்று அர்த்தமா? இதெல்லாம் என்ன அபத்தம் என்று தனது கோபத்தை வெளிப்படுத்தினார். தங்களைப் பற்றி வதந்திகள் எதையும் பரப்ப வேண்டாம் என்று சஹலும் இதுபோன்ற ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.

இந்திய அணியின் சாம்பியன்ஸ் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின்போது சஹலுடன் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள், காணொளியை தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மெஹ்வாஷ். இவரும் சஹலும் இணைந்த புகைப்படங்களும் காணொளிகளும் மீண்டும் வெளிவந்துள்ளதால் இருவரும் நண்பர்கள் மட்டும்தானா அல்லது இவர்களுடைய உறவு அடுத்தக் கட்டத்தைத் தாண்டியுள்ளதா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளார்கள் ரசிகர்கள்.

இன்னும் இரு வாரங்களுக்குள் தொடங்கவுள்ள ஐபிஎல் 2025 போட்டியில் ரூ. 18 கோடிக்குத் தன்னைத் தேர்வு செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிகாக விளையாடவுள்ளார் சஹல்.