@harbhajan_singh
விளையாட்டு

கடந்த 10 ஆண்டுகளாக தோனியுடன் பேசவில்லை: ஹர்பஜன் சிங்

2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியில் விளையாடினார் ஹர்பஜன் சிங்.

யோகேஷ் குமார்

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தோனியுடன் நான் பேசுவதில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியில் விளையாடினார் ஹர்பஜன் சிங்.

2018-ல் ஐபிஎல் போட்டியை வென்ற சிஎஸ்கே அணியிலும் ஹர்பஜன் சிங் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில் தோனியுடனான உறவு குறித்து நியூஸ் 18-க்கு பேட்டியளித்த ஹர்பஜன் சிங், “நான் தோனியுடன் பேசுவதில்லை. அவருக்கு எதிராக எனக்கு எந்த கருத்தும் இல்லை. ஒருவேளை அவருக்கு அப்படி ஏதேனும் இருந்திருந்தால், இந்நேரம் அதனை கூறியிருப்பார். சிஎஸ்கே அணியில் விளையாடியபோது அவரிடம் பேசினேன். அதுவும் மைதானத்தில் மட்டும்தான். ஆட்டம் முடிந்தபிறகு அவருடைய அறைக்கு நான் சென்றதில்லை, அவரும் என் அறைக்கு வந்ததில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் நான் பேசுவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.