ஷாஹீன் அஃப்ரிடி ANI
விளையாட்டு

டெஸ்டில் இடம்பெறாத ஷாஹீன் அஃப்ரிடி: முன்னாள் வீரர்கள் விமர்சனம்

யோகேஷ் குமார்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்டில் பாகிஸ்தானின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியை தனை முன்னாள் பாகிஸ்தான் வீரர்களான வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோர் விமர்சித்துள்ளனர்.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது. முதல் இரு டெஸ்டில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மூன்றாவது டெஸ்டில் ஷாஹீன் அஃப்ரிடிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இம்முடிவு குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர்களான வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோர் விமர்சனம் செய்துள்ளனர்.

இது குறித்து வாசிம் அக்ரம் பேசியதாவது:

“அணி நிர்வாகத்தை குறை சொல்ல முடியாது, இது ஷாஹீன் அஃப்ரிடியின் முடிவே. ஆட்டத்தில் சிறந்து விளங்க வேண்டுமா அல்லது பணக்காரானாக வேண்டுமா என்பதை வீரர்களே முடிவு செய்ய வேண்டும். ஆஸ்திரேலியா தொடர் முடிந்தவுடன் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அவர் கேப்டானாக செயல்படவுள்ளார்.

டி20 ஆட்டங்கள் பொழுதுபோக்கிற்காகவும், கிரிக்கெட் வாரியம் பணம் சம்பாதிப்பதற்காகவும் நடத்தபடுகின்றன, ஆனால் டெஸ்டில் விளையாடுவது தான் சிறந்தது என்பதை வீரர்கள் உணர வேண்டும்.

20 வருடம் முன்பு ஒரு டெஸ்டில் என்ன நடந்தது என்பதை அனைவரும் நினைவில் வைத்திருப்பார்கள், ஆனால் சமீபத்தில் நடந்த டி20 ஆட்டத்தை மறந்து விடுவார்கள். இதுவே டெஸ்ட்டுக்கும், டி20 ஆட்டத்திற்க்கும் உள்ள வித்தியாசம்” என்றார்.

மேலும் வக்கார் யூனிஸ் இது குறித்து, “இதை கேட்டவுடன் நான் சிரித்தேன். இதற்கு முன்பு நடந்த ஆட்டத்தில் அவர் நன்றாக பந்துவீசியதால், இந்த ஆட்டத்திலும் அவர் விளையாட வேண்டும் என்று நினைத்தேன்” என்றார்.

இத்தொடரில் ஷாஹீன் அஃப்ரிடி 2 ஆட்டங்களில், 99.2 ஒவர்களை வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.