ANI
விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: வங்கதேச அணி அறிவிப்பு

முதல் டெஸ்ட் சென்னையில் செப்டம்பர் 19 அன்று தொடங்குகிறது.

யோகேஷ் குமார்

இந்திய டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, வங்கதேசம் இடையிலான இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19 அன்று தொடங்குகிறது. முதல் டெஸ்ட் சென்னையிலும், இரண்டாவது டெஸ்ட் செப்டம்பர் 27-ல் கான்பூரிலும் தொடங்குகிறது.

இந்நிலையில் இத்தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று வரலாறு படைத்தது வங்கதேச அணி. இத்தொடரில் விளையாடிய வங்கதேச அணியில் இருந்து ஷொரிஃபுல் இஸ்லாமுக்கு பதிலாக ஜாகர் அலிக்கு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி பாகிஸ்தான் தொடரில் இடம்பெற்ற அனைவரும் இத்தொடரிலும் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி

நஜ்முல் ஷான்டோ (கேப்டன்), லிட்டன் தாஸ், ஹசன் மஹ்முத், ஜாகர் அலி, ஷகிப் அல் ஹசன், மெஹதி ஹசன், டஸ்கின் அஹமது, முஷ்ஃபிகுர் ரஹீம், ஸாகிர் ஹசன், ஷத்மன் இஸ்லாம், நயிம் ஹசன், மஹ்முதுல் ஹசன், மோமினுள் ஹக், தைஜுல் இஸ்லாம், நஹித் ராணா, கலீத் அஹமது.