டிராவிஸ் ஹெட் ANI
விளையாட்டு

ஐபிஎல் ஏலத்தில் டிராவிஸ் ஹெட்டை நூலிழையில் தவறவிட்ட சிஎஸ்கே!

ஐபிஎல் 2024-ல் 2 அரை சதம், ஒரு சதம் உள்பட 6 ஆட்டங்களில் 324 ரன்கள் எடுத்துள்ளார் டிராவிஸ் ஹெட்.

யோகேஷ் குமார்

நடப்பு ஐபிஎல் பருவத்தில் அசத்தி வரும் டிராவிஸ் ஹெட்டை ஐபிஎல் ஏலத்தில் நூலிழையில் தவறவிட்டது சிஎஸ்கே அணி.

நேற்று நடைபெற்ற தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 266 ரன்கள் விளாசிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் டிராவிஸ் ஹெட் 32 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் 2024-ல் 2 அரை சதம், ஒரு சதம் உள்பட 6 ஆட்டங்களில் 324 ரன்கள் எடுத்துள்ளார் டிராவிஸ் ஹெட். ஸ்டிரைக் ரேட் - 216.00.

மேலும் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் கோலிக்கு அடுத்ததாக 2-வது இடத்தில் உள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் டிராவிஸ் ஹெட்டுக்காக ரூ. 6.60 கோடி வரை சென்று தவறவிட்டது சிஎஸ்கே அணி. முடிவில் ரூ. 6.80 கோடிக்கு சன்ரைசர்ஸ் அவரைத் தேர்வு செய்தது.

இதன் பிறகு, மிட்செல்லை ரூ. 14 கோடிக்கு எடுத்தது சிஎஸ்கே. ஒருவேளை சிஎஸ்கே அணி டிராவிஸ் ஹெட்டை தேர்வு செய்திருந்தால் அது அவர்களுக்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கும்.