ஆசியக் கோப்பைக்கான இந்திய ஏ அணியில் தமிழக வீரர் சாய் கிஷோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா ஏ, இலங்கை ஏ, பாகிஸ்தான் ஏ உள்பட 8 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பைப் போட்டி அக். 18 அன்று தொடங்குகிறது. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக வீரர் சாய் கிஷோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திலக் வர்மா இந்திய ஏ அணியை வழிநடத்துகிறார். அபிஷேக் சர்மா, ராகுல் சஹார் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். அதேபோல், ஐபிஎல் போட்டிகளில் அசத்திய பிரப்சிம்ரன் சிங், பதோனி, வைபவ் அரோரா, வதேரா போன்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை 50 ஓவர்கள் ஆட்டமாக நடைபெற்ற இப்போட்டி இம்முறை டி20 வடிவில் நடைபெறவுள்ளது. இந்திய ஏ அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் ஏ அணியுடன் அக்டோபர் 19 அன்று விளையாடுகிறது.
இந்திய ஏ அணி:
திலக் வர்மா (கேப்டன்), அபிஷேக் சர்மா, பதோனி, நிஷாந்த் சிந்து, அனுஜ் ராவத், பிரப்சிம்ரன் சிங், நேஹல் வதேரா, அன்ஷுல் கம்போஜ், ஹிருத்திக் ஷொகீன், ஆகிப் கான், வைபவ் அரோரா, ராஷிக் சலாம், சாய் கிஷோர், ராகுல் சஹார்.