நுவான் துஷாரா விலகல்! @OfficialSLC
விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: காயத்தால் நுவான் துஷாரா விலகல்!

முதல் டி20 ஆட்டம் ஜூலை 27 அன்று நடைபெறவுள்ளது.

யோகேஷ் குமார்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இலங்கை வீரர் நுவான் துஷாரா விலகியுள்ளார்.

இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் பங்கேற்பதற்காக இலங்கைக்குச் சென்றுள்ளது. இத்தொடர் ஜூலை 27 அன்று தொடங்கி ஆகஸ்ட் 7 வரை நடைபெறவுள்ளது.

டி20 ஆட்டங்கள் அனைத்தும் பல்லேகலேவிலும், ஒருநாள் ஆட்டங்கள் அனைத்தும் கொழும்புவிலும் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் இடது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரா விலகியுள்ளார்.

முன்னதாக, வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீராவும் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியிருந்தார்.

இவர்களுக்கு பதிலாக அசிதா ஃபெர்னாண்டோ மற்றும் தில்ஷன் மதுஷன்கா ஆகியோர் மாற்று வீரர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.