விளையாட்டு

ஆகஸ்டில் வங்கதேசம் செல்லும் இந்திய அணி

2025 ஆசியக் கோப்பை டி20க்கு தயாராகும் விதமாக 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது.

கிழக்கு நியூஸ்

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி வரும் ஆகஸ்டில் தலா 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசம் செல்கிறது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்குப் பிறகு இந்தியா மேற்கொள்ளவிருக்கும் முதல் பயணம் இது. முதலில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாடுகிறது.

ஒருநாள் தொடர்

  • முதல் ஒருநாள் - ஆகஸ்ட் 17, மிர்பூர்

  • இரண்டாவது ஒருநாள் - ஆகஸ்ட் 20, மிர்பூர்

  • மூன்றாவது ஒருநாள் - ஆகஸ்ட் 23, சாட்டோகிராம்

இதைத் தொடர்ந்து, 2025 ஆசியக் கோப்பை டி20க்கு தயாராகும் விதமாக 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது. ஆசியக் கோப்பை டி20ஐ இந்தியா நடத்துகிறது.

டி20 தொடர்

  • முதல் டி20 - ஆகஸ்ட் 26, சாட்டோகிராம்

  • இரண்டாவது டி20 - ஆகஸ்ட் 29, மிர்பூர்

  • மூன்றாவது டி20 - ஆகஸ்ட் 31, மிர்பூர்

இந்தப் பயணத்துக்காக இந்திய அணி ஆகஸ்ட் 13-ல் வங்கதேசம் செல்கிறது. வங்கதேசம் ஆகஸ்டில் விளையாடுவது வழக்கம் கிடையாது. இதற்கு முன்பு 2017-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் மற்றும் 2021-ல் ஆஸ்திரேலியாவுடன் 5 டி20யில் விளையாடியது வங்கதேசம்.