விளையாட்டு

உலகின் சிறந்த டி20 அணி இந்தியா: ஏன்?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

கிழக்கு நியூஸ்

2024-ல் 24 சர்வதேச டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்திய அணி 22 வெற்றிகளைப் பெற்று அசைக்க முடியாத அணியாக வலம் வந்துகொண்டிருக்கிறது.

தென்னாப்பிரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. டர்பனில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் மீண்டும் சதமடித்து அசத்தினார்.

2024-ல் இந்தியா பெறும் 22-வது டி20 வெற்றி இது.

நடப்பாண்டில் இந்தியா 4 டி20 தொடர்களில் விளையாடியுள்ளது. இது தவிர டி20 உலகக் கோப்பையில் விளையாடியுள்ளது. இவை அனைத்திலும் இந்தியா வெற்றி கண்டுள்ளது. ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20யில் ஓர் ஆட்டத்தில் மட்டும் இந்தியா தோல்வியடைந்தது. இந்த ஆண்டில் இந்தியா கண்ட ஒரே தோல்வி இது.

2024-ல் இந்தியா கண்ட வெற்றிகள்:

  • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர்:

    3-0 (ஓர் ஆட்டம் சூப்பர் ஓவர் மூலம் வெற்றி)

  • டி20 உலகக் கோப்பை:

    9 ஆட்டங்களில் 8 வெற்றிகள் (கனடாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது)

  • ஜிம்பாப்வேவுக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர்:

    4-1

  • இலங்கைக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர்:

    3-0 (ஓர் ஆட்டம் சூப்பர் ஓவர் மூலம் வெற்றி)

  • வங்கதேசத்துக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர்:

    3-0

இந்த வரிசையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.