டி20 உலகக் கோப்பை, நாள் 14: ஆட்ட முடிவுகளும் முக்கிய நிகழ்வுகளும் @icc
விளையாட்டு

டி20 உலகக் கோப்பை, நாள் 14: ஆட்ட முடிவுகளும் முக்கிய நிகழ்வுகளும்

பாகிஸ்தான் அணி சூப்பர் 8 வாய்ப்பை இழந்து வெளியேறியது.

யோகேஷ் குமார்

ஆட்ட முடிவுகள்

அமெரிக்கா vs அயர்லாந்து

ஆட்டம் மழையால் ரத்தான காரணத்தால், இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.

தென்னாப்பிரிக்கா vs நேபாளம்

மிகவும் பரப்பரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நேபாள அணி சூப்பர் 8 வாய்ப்பை இழந்தது.

தென்னாப்பிரிக்கா 115/7 (ரீஸா ஹென்ட்ரிக்ஸ் 43, குஷால் 4-19, திப்பேந்திர சிங் 3-21) நேபாள் (ஆசிஃப் ஷேக் 42, ஷம்சி 4-19)

நியூசிலாந்து vs உகாண்டா

உகாண்டா அணியை 88 பந்துகள் மீதமிருந்த நிலையில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து அணி.

உகாண்டா 40 (வைஸ்வா 11, டிம் சௌதி 3-4) நியூசிலாந்து 41/1 (கான்வே 22)

முக்கிய நிகழ்வுகள்

* அமெரிக்க அணியின் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறியது. கடந்த முறை பாகிஸ்தான் அணி இறுதிச் சுற்றில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது.

* டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக முறை 100-க்கும் குறைவான ரன்களில் ஆல் அவுட் ஆன போட்டியாக இப்போட்டி அமைந்துள்ளது. இப்போட்டியில் இதுவரை 10 முறை அவ்வாறு நடந்துள்ளது.

* டி20 உலகக் கோப்பையில் குறைவான ரன்ரேட் என்ற மோசமான சாதனையைச் செய்துள்ளது உகாண்டா அணி. நியூசிலாந்து அணி எதிராக 18.4 ஓவர்கள் விளையாடிய அந்த அணி 40 ரன்கள் மட்டுமே எடுத்தது.

* அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றதன் மூலம், 2026 டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.